You are here: Home // வணிகம் // அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிவு

அன்னியச் செலாவணி சந்தையில் இன்று டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து காணப்பட்டது.

அன்னியச் செலாவணி சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று மாலை வர்த்தகம் முடிவடையும்போது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 47.09/10 ஆக காணப்பட்டது.

இந்நிலையில், இன்று காலை வர்த்தகம் தொடங்கியபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 21 காசுகள் சரிந்து 47.30 ஆக காணப்பட்டது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று காலை ஏற்பட்ட சரிவு மற்றும் டாலர் தேவை அதிகரித்தது ஆகியவையே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு காரணம் என அன்னியச் செலாவணி சந்தை வட்டாரங்கள் தெரிவித்தன.

நன்றி: Yahoo News

Tags: ,

Leave a Reply

Designed by Theme Junkie. Powered by WordPress.