You are here: Home // செய்திகள், தேசியம் // அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் இந்தியா வருகை!

அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ் இந்தியா வருகை!

இந்தியா-அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் காண்டலீசா

ரைஸ் இன்று இந்தியா வருகிறார்.

இதுகுறித்து அமெரிக்க அரசின் செய்தித் தொடர்பாளர் மெக்கார்மார்க் செய்தியாளர்களிடம் கூறுகையில், “வெளியுறவுத்துறை அமைச்சர் ரைஸ், 3 நாள் அரசுமுறைப் பயண

மாக இந்தியா செல்கிறார். அணுசக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து பிரதமர் மன்மோகன் சிங், வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஆகியோருடன் ஆலோசனை நடத்துவார்” என்றார்.

ரைஸ்சின் இந்த பயணத்தின்போது, இந்தியா- அமெரிக்கா இடையேயான அணுசக்தி ஒ‌த்துழை‌ப்பு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நன்றி: PTI News

Tags: ,

Leave a Reply

Designed by Theme Junkie. Powered by WordPress.