ஜெர்மெனியில் நடந்து முடிந்த பிட்பர்கர் ஓபன் கிராண்ட் பிரீ பேட்மின்டன் தொடரில், இந்தியாவின் சேத்தன் ஆனந்த் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினார்.
இதன்மூலம், இந்திய பேட்மின்டன் வரலாற்றில் ஒற்றையர் பட்டம் வென்ற முதல் வீரர் என்ற வரலாற்றுப் பெருமையை அவர் பெற்றார்.
சேத்தன் ஆனந்த் தனது இறுதிச் சுற்றில், இந்திய வீரரான அரவிந்த் பட் என்ற வீரரையே எதிர்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.
இதில், ஆனந்த் 23-25, 24-22, 23-21. என்ற செட்களில் ஒரு மணி நேரம் போராடி அரவிந்தை வீழ்த்தினார்.
காமன்வெல்த் போட்டிகளில் வெண்கலம் வென்றுள்ள சேத்தன் ஆனந்த், தற்போது கிராண்ட் பிரீ பேட்மின்டன் போட்டி ஒன்றில் சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.
கலப்பு இரட்டையர் போட்டி : இந்திய இணை சாம்பியன்
இப்போட்டிகளின் கலப்பு இரட்டையர் பிரிவுக்கான சாம்பியன் பட்டத்தை இந்தியாவின் திஜு – ஜ்வாலா குத்தா (சேத்தன் ஆனந்தின் மனைவி) இணை கைப்பற்றியது.
இந்திய இணை தமது இறுதிச் சுற்றில், 8-21, 21-17, 22-20 என்ற செட்களில் டென்மார்க்கின் ஜோக்சிம் ஃபிஷர் மற்றும் கிறிஸ்டினா பெடர்சன் இணையை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.
மூலம்: Yahoo News
