You are here: Home // தமிழகம் // மின் தடைக்கு எதிராக திருச்சியில் மக்கள் போராட்டம்

மின் தடைக்கு எதிராக திருச்சியில் மக்கள் போராட்டம்

திருச்சி: தற்போது தொடங்கிய புதிய 6 முதல் 8 மணி நேர மின்தடை காரணமா, திருச்சியில் சிலர் நேற்று நூதன போராட்டம் செய்யத் தொடங்கினர்.  நகரத்தின் பல்வேறு இடங்களில் மக்கள், சாலை நடுவில் கட்டில் போட்டு தூங்கி போராட்டம் செய்யத் தொடங்கினர். இதனால் அப்பகுதிகளில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப் படைந்தது.

தற்போழுது நகரம், கிராம என்று இல்லாமல் மின்தடை இருப்பதால் மக்கள் மிகுந்த துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.  இந்த மின்வெட்டு காரணமாக உடல் மற்றும் மன உளைச்சலுக்கு மக்கள் ஆளாவதை அவர்களின் வாயிலிருந்து வெளிவரும், வார்த்தைகளின் அறிந்து கொள்ளலாம்.

கடந்த மாதங்களாக நிகழ்ந்த மின்வெட்டுக்குப் பிறகு தமிழகத்தின் நிலை:

  • தமிழகத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் பயன்பாடு அதிகரித்துள்ளது.
  • கூடவே காற்று மாசுபடுவது 80% அதிகரித்துள்ளது.
  • உள்நாட்டு தொழிழ் துறை முற்றுலும் பாதிப்படைந்துள்ளது.
  • பள்ளி செல்லும் குழந்தை முதல் கணினியை வைத்து வேலை செய்யும் அலுவலர் வரை அனைவரும் பாதிப்படைந்துள்ளனர்.
  • புதிதாக காமராஜரின் பொற்காலத்தில் உள்ளது போல் ஒரு உணர்வை அனைது இளம் தலைமுறையினரும் அறிகின்றனர்.

ஆனால் இவ்வளவு நடந்தும் மக்கள் இன்னும் ஆவலாய் இருப்பது அரசு இந்த குறையை நாளைக்கே தீர்த்துவிடும் என்பது தான்.  பொறுத்திருந்து பார்போம். நாளையா அல்லது 2040-லா என்று… ???

Tags: , , ,

Leave a Reply

Designed by Theme Junkie. Powered by WordPress.