You are here: Home // கோலிவுட் // மீண்டும் நாயகனாக நடிக்கும் பிரபுதேவா!

மீண்டும் நாயகனாக நடிக்கும் பிரபுதேவா!

திரைப்பட இயக்குனராக சோபித்துவரும் பிரபுதேவா, மீண்டும் தமிழ் சினிமாவில் நாயகனாக நடிக்க முழுவீச்சில் வலம்வரவுள்ளார்.

நடன இயக்குனராக இருந்து நடிப்பில் தடம் பதித்த பிரபுதேவா, அது சரிவராததால் படம் இயக்குவதில் கவனம் செலுத்தினார்.

அவர் இயக்கிய ‘போக்கிரி’ உள்ளிட்ட படங்கள் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றாலும், நடிகராக ஜெயிக்க வேண்டும் என்ற வெறி அவருக்குள் இன்னும் கனன்று கொண்டேதான் இருக்கிறது.

அதை விசிறி விடுவது போல் இப்போது ஒரு வாய்ப்பு வந்துள்ளது.

பிரபுதேவாவை வைத்து ‘அலாவுதீன்’ படத்தை இயக்கிய ரவி சக்ரவர்த்தி கூறிய கதை, பிரபுதேவா

வுக்கு பிடித்திருக்கிறது.

இதனால், தனது இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘வில்லு’ படம் முடிந்த பிறகு, ரவியின் இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார், பிரபுதேவா.

இதோடு, தங்கர்ப

ச்சானின் புதிய படத்தில் நடிக்கவும் வாய்ப்பு வந்துள்ளதால், சில நாட்களுக்கு படம் இயக்குவதை ஒத்திவைக்க தீர்மா

னித்துள்ளார், பிரபுதேவா. நன்றி: Yahoo News

Tags: ,

Leave a Reply

Designed by Theme Junkie. Powered by WordPress.