மைக்ரோசாப்ட் நிறுவனம் போராடுவதில் மிகவும் கைதேர்ந்த நிறுவனம் ஆகும். என்னதான் Browser (இணைய உலாவி) ஆதிக்கத்தை Firefox (பையர்பாக்ஸ்) பிடித்தாலும் மைக்ரோசாப்ட் விடுவதாக இல்லை. இவர்களின் இப்போதைய உக்தி என்னவென்றால், புதிய வெளியீடான இந்டெர்னெட் எக்ஸ்புளோரர் 8 (Internet Explorer
பதிப்பை இலவவசமாக குருந்தகட்டில் வெளியிடுவது தான். அதன்படி அனைவரும் இப்பதிப்பை இலவசமாக குருந்தகட்டில் (FREE CD Delivery) பெறலாம்.

இதைப் பெற, இங்கு சென்று உமது நாட்டைத் தெரிவு செய்து, உமது முகவரியையும் கொடுத்தால் வீடு தேடி வரும்.
உள்குத்து:
கொஞ்சம் நில்லுங்க…!அவங்க அந்த CD யைத்தான் இலவசமாக கொடுக்குறாங்க. தபால் செலவை நீங்க தான் கட்டனும். எவ்வளவு தெரியுமா?
சாதாரண அஞ்சலில் வர: ரூபாய்:469.00
சர்வதேச அஞ்சலில் வர: ரூபாய்:929.00
இது தான் மைக்ரோசாப்ட் செய்யும் மிகப் பெரிய காமெடி
இதற்கு பதில் இதை பதிவிறக்கம் (download) செய்து கொள்ளலாம். இங்கு சென்று இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
இணைப்புகள்: Internet Explorer 8 Free CD Delivery - IE 8 Free Download
