தமிழில் வலைப்பதிவு தொடங்குதல் என்பது சிலருக்கு சற்று கடினமாகவே இருக்கிறது. இதன்
சுமையைப் போக்க, முன்னரே தயார் செய்யப்பட்ட கருவிகள் நமக்கு உதவும். அதன்படி இந்த ப்ளாக்கருக்கான (Blogger.com) தமிழ் அடைப்பலகையை (Tamil Template) இங்கு வெளியிடுகிறேன்.
இந்த அடைப்பலகை மூலம் எளிதாக தமிழில் வலைப்பதிவு தொடங்கலாம். இதனுடைய மிக முக்கியமான நன்மைகள் கீழெ கொடுக்கப்பட்டுள்ளன.
(For English Version Please click here.)
நன்மைகள்:
- ஏற்கனவே நிறுவப்பட்ட தமிழ்மணம் கருவிப்பட்டை. இதற்காக அடைப்பலகையில் மாற்றாம் செய்ய வேண்டியதில்லை. (Pre-Installed Tamilmanam Toolbar).
- நேரமும் காலமும் தமிழில். (நன்றி: ஜெகத்)
- மூன்று பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட அமைப்பு. (3 Columns)
- தேன்கூடில் மறுமொழி சேர்ப்பதற்காக முன்னரே நிரல் நிறுவப்பட்டுள்ளது.
- ஒலி ஒளி வலைப்பதிவு (Video Blogging) அமைப்பதற்கு ஏற்ப கட்டமைக்கப்பட்ட அமைப்பு.
- ஆசிரியரின் மறுமொழிகளை தனியொரு நிறத்தில் காட்டும் வாய்ப்பு. (Highlighted Author Comments feature)
- Layout section ல் Fonts and Colors ஐ மாற்றுவதற்கான வசதி.
- ஒவ்வொரு பதிவையும் வாசகர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான வசதி. (Share This Widget)
- பழைய ப்ளாக்கரில் இருப்பது போல் மேற்கோள் காட்டும் வசதி. (New Blockquote style)
- மிகவும் விரைவான பதிவிறக்கம். (Very very fast loading)
- அனைத்து உலாவிகளிலும் (Browsers) சிறப்பான தோற்றம்.
- Page Elements பகுதியில், வலைப்பதிவின் தலைப்பகுதிக்கு Gadgets புகுத்துவற்கான வசதி.
- வேண்டிய இடத்தில் விளம்பரங்கள் புகுத்த வசதி. (Adsense Ready, Ad Ready Template)
- தேடுபொறிக்கு பிடித்த முறையில் தயார் செய்யப்பட்ட நிரல். (Search Engine Friendly )
- புதிய draft.blogger.com ல் நன்றாக வேலை செய்கிறது.
- உங்கள் பதிவுகளுக்கு, உங்கள் தளத்திலேயே, உங்கள் பார்வையாளர்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக Tamilish.com ன் நிரல் முன்னரே நிறுவப்பட்டுள்ளது. ***புதியது***
நிறுவும் முறை:
- எந்த வலைப்பதிவிற்கு இந்த அடைப்பலகையை நிறுவ வேண்டுமோ அதன் Layout பகுதிக்குச் செல்லவும்.
- பிறகு Edit HTML என்ற பகுதிக்குச் செல்லவும்.
- அங்கே Download Full Template என்பதைச் சொடுக்கி உங்களுடைய பழைய அடைப்பலகையைச் சேமித்துக்கொள்ளவும். (ஏனென்றால் புதிதாக அடைப்பலகை நிறுவும் போது ஏதாவது தவறு நேரிட்டால் பழைய அடைப்பலகையை மீண்டும் நிறுவி அதை மீட்கலாம்.)
- பின்பு இப்பக்கத்தில் தரப்பட்டிருக்கும் “பதிவிறக்கு” என்பதனைச் சொடுக்கி cashlog-pro-tamil.zip என்ற கோப்பை உங்கள் கணினியில் சேமிக்கவும்.
- பிறகு அக்கோப்பை (Extract) பிரித்தால் cashlog-pro-tamil.xml என்ற கோப்பைப் பார்க்கலாம். (இணையத்திலேயே கோப்பைப் பிரிக்க WobZIP.org செல்லவும் – For Online File extractor)
- இறுதியாக cashlog-pro-tamil.xml என்ற கோப்பை தெரிவு செய்து Upload செய்யவும்.
பதிவிறக்கம்:
(For English Version Please click here.)
நேரடி மாதிரி:
பட மாதிரிகள்:



தேன்கூடு மூடி விட்டார்கள். tamilish.com நிரலை இணைத்தீர்கள் என்றால் வசதியாக இருக்கும்.
@Tamil3827 – உங்கள் மறுமொழிக்கு நன்றி. Tamilish.com நிரலை இணைத்துவிட்டேன்.
பார்வையாளர்கள் மீண்டும் அதை பதிவிறக்கம் செய்யவும்.
சருகு தமிழ் வலைப்பதிவு அடைப்பலகை வெளியிடப் படுகிறது…
தமிழில் வலைப்பதிவு தொடங்குதல் என்பது சிலருக்கு சற்று கடினமாகவே இருக்கிறது. இதன் சுமையைப் போ…
சருகு இணைய குழுவினருக்கு வாழ்த்துக்கள்
நன்றி.
[...] Tamil Language Version available here [...]
I can’t able to upload this type (like zip file) templates. so can you sent their code to my e-mail id : bestinipl@gmail.com
thanks friends.
சருகு இணைய குழுவினருக்கு வாழ்த்துக்கள்
@IPL – அந்த ZIP கோப்பை நீங்கள் விரித்தால் அதில் XML கோப்பு இருக்கும். அதைத்தான் நீங்கள் Upload செய்ய வேண்டும்.
@samaran – samaran அவர்களுக்கு எமது நன்றிகள்.