You are here: Home // இணையம் // தமிழ் சருகு இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தமிழ் சருகு இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது.

நீண்ட காலமாக தமிழில் ஒரு இணையதளம் தொடங்க வேண்டும் என்பது எனது ஆசை. அது இன்று நிறைவேறியுள்ளது. ஏற்கனவே ஆங்கிலத்தில் சருகு.காம் (www.sarugu.com) என்ற பெயரில் எழுதி வருகிறேன். ஆனால் தமிழில் ஒரு தீர்வாக இந்த சருகு.காமின் தமிழ் பதிப்பை வெளியிடுகிறேன்.

இங்கு எம்மாதிரியான தகவல்கள் கிடைக்கும்?

தற்போது முழு நேர செய்திகளை அளிக்கும் தளமாக மாற்றப் பட்டுள்ளது.

யான் ஏற்கனவே முதல்தமிழ் வலைப் பதிவில் இணையம் மற்றும் கணினி தொடர்பான தகவல்களை (கட்டுரைகள்) வெளியிட்டுள்ளேன்.  அதைப் போன்று கணினி அல்லது பொதுவான வகைப்பாடுகளில் இருந்து இங்கு கட்டுரைகளை எதிர்பார்க்கலாம்.

  • இணையதளம் வடிவமைப்பது பற்றிய எளிய தகவல்கள்.
  • கணினி மொழிகளை படிப்பதற்கான பயிற்சி முறைகள். (இது ஒளி ஒலி அமைப்பாகவோ அல்லது கட்டுரையாகவோ வெளியிடப் படும்)
  • புதிய புதிய தொழில்நுட்ப  தகவல்கள் ( இணையம் மற்றும் கணினி)
  • மேலும் இணையத்தின் மூலம் வருமானம் பெருவதற்காக என்ன என்ன வழிகள் இருக்கிறதோ அத்தனை வழிகளும் இங்கு வெளியிடப் படும்.
  • மற்றும் பொதுவான கட்டுரைகள் (சமுதாயம், விளையாட்டு, மற்றும் பல…)

நடப்புச் செய்திகளை வெளியிட ஆசிரியர்கள் கிடைத்திருக்கிறார்கள். அதனால் சுடச்சுட செய்திகளை இங்கே படிக்கலாம். ( மேலும் இதுபற்றி … )

யார் இத்தளத்திற்காக கட்டுரைகளை எழுதுவது?

ஏற்கனவே முதல்தமிழ் வலைப் பதிவில் பல பதிவுகளை என்னோடு சேர்ந்து குரு பகிர்ந்து கொண்டார்.  அவர் தனது படைப்புகளை இங்கும் வெளியிடுவார்.  என்னிடமிருந்து மிகவும் குறைந்த கட்டுரைகளையே இங்கு எதிர்பார்க்கலாம்.

தற்பொழுது நடப்புச் செய்திகளை வெளியிட புதிய ஆசிரியர்கள் கிடைத்துள்ளார்கள். ( மேலும் இதுபற்றி… )

உங்கள் கருத்துக்கள்:

ஒவ்வொரு கட்டுரைகளிலும் நீங்கள் கருத்துக்களை வெளியிடலாம்.  கருத்துக்கள் அல்லாமல் மற்ற கணினி தொடர்பான வினாக்களை வெளியிட்டால்  உங்களுடைய மின்னஞ்லுக்கு பதில் அனுப்பிவைக்கப் படும் அல்லது இங்கு வெளியிடப்படும்.

Tags: , , , , ,

2 Responses to " தமிழ் சருகு இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது. "

  1. jagadeesan says:

    sarugu (the last stage of leaf) is the new and healthy food for plants to form illai(the first stage of leaf) working as a candle giving light to the world by sacrifice

  2. உங்களுடைய கருத்திற்கு நன்றி ஜெகதீசன்.

Leave a Reply

Designed by Theme Junkie. Powered by WordPress.